முல்லைத்தீவு - தீர்த்தக்கரை பகுதியில் கிணற்றினை துப்பரவு செய்யும் போது அதிகளவான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
நேற்று மாலை தீர்த்தக்கரை பகுதியில் கிணறு ஒன்றினை துப்பரவு செய்யும் போது வெடி பொருட்கள் இருப்பதாக மக்கள் தகவல் வழங்கியதினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிறப்பு அதிரடிப்படையினர் தொடர்ச்சியாக கிணற்றினை துப்பரவு செய்த போது துப்பாக்கி ரவைகள் தொடர்ச்சியாக கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது, சிறப்பு அதிரடிப்படையினரின் கண்காணிப்பில் கிணற்றில் இருந்து 1529 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.


