ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது அமர்வில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடுதிரும்பியுள்ளார்.
நியுயோர் நகரில் இருந்து கட்டார் தோஹா விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணித்த ஈ கே 650 எனும் விமான மூடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் ஆகியோர் இன்று முற்பகல் 8.55 அளவில் நாடுதிரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் கடந்த
18 ஆம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்கு பயணமானார்.
அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வௌிநாடொன்றில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
