நெடுந்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஐந்தாம் வட்டாரம் ஒற்றைப்பணை சந்தியில் அமைந்துள்ள மாதாவின் சுருவம் விசமிகளால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவமானது இன்று மதியம் 12 மணியளவில் நடைபெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
நெடுந்தீவு ஐந்தாம் வட்டாரம் ஒற்றைப் பனையடி சந்தியில் நீண்ட காலமாக மக்களால் வணங்கப்பட்டு வந்த மாதா சுருவமே இவ்வாறு அடித்து உடைக்கப்பட்டுள்ளது.

