நுவரெலியா மாவட்டத்திற்குட்பட்ட ராகலை பகுதியில் தோட்டக் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பகுதியில் நேற்று இரவு இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக ராகலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
இதேவேளை தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் ராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.