வலி.கிழக்கு பிரதேச சபையில் ஈபிடிபி உறுப்பினர் எனத் தெரிவித்து தமது கடமைக்கு இடையூறு விளைவித்ததால் காவல்துறையினர் வானத்தை நோக்கி சூடு நடத்தி எச்சரித்தனர்.
இந்தச் சம்பவம் ஊரெழு பகுயில் நேற்று(03) இரவு 8 மணியளவில் இடம்பெற்றது.
ஊரெழு பகுதியில் காவல்துறையினர் கடமையில் ஈடுபட்டிருந்தனர். மோட்டடார் சைக்கிள் ஒன்றில் இருவர் தலைக்கவசமின்றி ஆபத்தான முறையில் பயணித்தனர் அவர்களை வழிமறித்து சாரதி அனுமதிப்பத்திரத்தை வாங்கி தண்டனைப் பத்திரம் எழுத முற்பட்ட போது அங்கு வந்த பிரதேச சபை உறுப்பினர் காவல்துறையினருடன் முரண்பட்டார்.
அவரது நடவடிக்கை எல்லை மீறிச் சென்றதனால் காவல்துறை உத்தியோகத்தர் வானத்தை நோக்கி இரண்டு தடவை சூடு நடத்தி எச்சரித்தார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் தன்னை ஈபிடிபி கட்சி என அறிமுகப்படுத்தி பல தடவைகள் காவல்துறையினருடன் முரண்பட்டு கடமைக்கு இடையூறு விளைவிப்பவர் என்றும் காவல்துறையினர் கூறினர்.
