திருகோணமலையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

திருகோணமலை மாவட்டத்தில் பொது இடங்களிலும், சந்திகளிலும் மக்கள் விடுதலை முன்னணியினால் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அரிசி, சமையல் எரிவாயு, எண்ணெய், பால்மா, பண்டங்களின் விலை உயர்வுக்கு உடனடியாக தீர்வினை வழங்கு மற்றும் வீம்பு வார்த்தை மற்றும் தம்பட்டங்களை நிறுத்து, பொருட்களின் விலையைக் குறை போன்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளே ஒட்டப்பட்டுள்ளன.

கந்தளாய், திருகோணமலை, தம்பலகாமம் மற்றும் கிண்ணியா போன்ற பிரதேசங்களில் இவ்வாறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும், சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை