ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபாவினால் அதிகரிப்பு

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தை உரிமையாளர்கள் கடந்த சனியன்று அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், இன்றையதினம் அறிக்கையொன்றை விடுத்துள்ள பிரிமா நிறுவனம், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 17 ரூபாய் 50 சததத்தால் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த விலை அதிகரிப்பு, கடந்த சனிக்கிழமை (27) முதல் அமுலாகுமெனவும் பிரிமா நிறுவனம் அறிவித்துள்ளது.
புதியது பழையவை