பிரான்ஸ் கடற்பரப்பில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து-27 பேர் உயிரிழப்பு

பிரான்ஸ் கடற்பரப்பில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்27 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸில் இருந்து பிரித்தானியா நோக்கி பயணித்த அகதி படகு ஒன்று Calais பகுதியில் உள்ள ஆங்கில கால்வாயில் முழ்கி நேற்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதேவேளை 2014 ஆம் ஆண்டின் பின்னர் ஏற்பட்ட பாரிய அனர்த்தம் இதுவாகும் என இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய அதிகாரிகள் விமானம் மற்றும் கடல்மார்க்கமாக மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
புதியது பழையவை