திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலம்போட்டாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 04 உழவு இயந்திரங்களுடன் நான்கு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இக்கைது இன்று (20) பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களைத் திருகோணமலை நீதிமன்றில் முன்னிறுத்த உள்ளனர்.


