பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2022ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு, 93 மேலதிக வாக்குகளால் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த வாக்கெடுப்பு இன்று மாலை இடம்பெற்றது. இதன்போது பாதீட்டுக்கு ஆதரவாக 153  வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு விவாதம் கடந்த 13ஆம் திகதியில் இருந்து இன்று வரை நடத்தப்பட்டது.

இந்தநிலையில் நாளை முதல் குழுநிலை விவாதம் இடம்பெறவுள்ளது.
இதனையடுத்து எதிா்வரும் டிசம்பா் 10 ஆம் திகதி  இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. 
புதியது பழையவை