நாளாந்தம் கொரோனா மரணம் அதிகரிப்பு

நாட்டில் மேலும் 31 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 158 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மரணமடைந்த 31 பேரில் 21 ஆண்களும், 10 பெண்களும் அடங்குகின்றனர்.
இவர்களில் 23 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோர். 7 பேர் 30 – 59 வயதுக்கு இடைப்பட்டோர். அதேவேளை, ஒருவர் 30 வயதுக்குட்பட்டவர்.
புதியது பழையவை