புகையிரத வீதியில் கைபேசியில் உரையாடியவரை மோதித்தள்ளியது ரயில்

திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் ரயில் விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நேற்று (07)மாலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் முள்ளிப்பொத்தானையை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான ஹமீட் முபீட் வயது (21)என தெரியவருகிறது.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, புகையிரத வீதியில் நின்று கொண்டு தொலைபேசியில் உரையாடியதன் காரணமாக புகையிரத வண்டி மோதுண்டதில் இச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரியவருகிறது.

குறித்த குடும்பஸ்தரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர். 
புதியது பழையவை