மட்டக்களப்பு காந்தி பூங்கா புனரமைக்கப்பட்டு மாநகர சபையிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (20) இடம்பெற்றது.
மட்டக்களப்பு விமானப்படையின் குறுப் கப்டன் நிலந்த பியசேன தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் கலந்து சிறப்பித்தார்.
சேவா வனிதா நிதி உதவியால் இலங்கை விமானப் படையினரால் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட காந்தி பூங்காவானது மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவனிடம் நேற்று (20) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.




