ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தி!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டு இன்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன.

2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்ட, கோட்டாபய ராஜபக்ச,
நாட்டு மக்களால் அளிக்கப்பட்ட 52.25 சதவீத வாக்குகளுடன், 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, 7ஆவது நிறைவேற்று அதிகாரம்
கொண்ட ஜனாதிபதியாக அநுராதபுரத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

நாட்டின் தேசியப் பாதுகாப்பு, பொருளாதார முன்னேற்றம் மற்றும் உலகளாவிய நாடுகள் எதிர்நோக்கும் கொவிட்-19 இடரை
வெற்றிகொள்ளும் வகையில் தனது ஆட்சியினை முன்கொண்டு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை