இலங்கையில் போர் வெற்றிகளை நினைவுகூர நினைவிடங்களை நிர்மாணிக்கக் கூடாது என பேராசிரியர் அகலகட சிறிசுமண தேரர் தெரிவித்துள்ளார்.
சிங்கள இணையத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
சந்தஹிரு சேய தாது கோபுரம் போர் வெற்றியை நினைவுக்கூரும் நினைவு தூபியாகவே நியமிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப சந்தர்ப்பத்திலேயே நான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன்.
இப்படியான நினைவிடங்களை நிர்மாணிப்பதன் மூலம் தோல்வியடைந்த தமிழ் தரப்பினர் மத்தியில் ஆத்திரத்தை உருவாக்கும். அப்படியான மனநிலை ஏற்படும் வகையில் நடந்துக்கொள்ளக் கூடாது.
போரில் வெற்றிவர்கள் திருப்தியும் பெருமையும் அடைவார்கள். ஆனால் தோல்வியடைந்தவர்களுக்கு துன்பமும், துயரமும் அதிகம் என்பதுடன் தோல்வியடைந்தவர்கள் ஆத்திரமடைவார்கள். இதனை சாந்தப்படுத்த முடியாது.
பௌத்த சமயம் யுத்தங்களை அங்கீகரிப்பதில்லை.
சந்தஹிரு சேய தாது கோபுரம் தோல்வியடைந்தவர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தும் தீ.
இதனை நிர்மாணித்ததால், சிங்கள பௌத்தர்கள் சிலரும், சில இராணுவத்தினர் மாத்திரமே மகிழ்ச்சியடைவார்கள் எனவும் சிறிசுமண தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.



