உள்ளூராட்சி மன்றங்களுக்கான பதவிக் காலத்தை நீடிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல்களை நடாத்தாது பதவிக் காலத்தை ஓராண்டுக்கு நீடிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, 24 மாநகரசபைகள், 41 நகரசபைகள் மற்றும் 275 பிரதேச சபைகள் என்பனவற்றுக்கான பதவிக் காலம் மேலும் ஓராண்டுக்கு நீடிக்கப்பட உள்ளது.
இந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தவணை எதிர்வரும் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் பூர்த்தியாகின்றமை குறிப்பிடத்தக்கது. பெருந்தொற்று நிலைமை மற்றும் பொருளாதார பிரச்சினை என்பனவற்றைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்படுவதாக அரசாங்கம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தலா 4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
