கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேனை, எதிர்வரும் 17 ஆம் திகதி, கிளிநொச்சி, பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவுக்கு சமூகமளிக்குமாறு, கிளிநொச்சி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக, கிளிநொச்சி மாவட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும், கொழும்பு 4 ஆம் மாடியிலும், கிளிநொச்சியிலும் அமைந்துள்ள பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவின் அலுவலகங்களுக்கு, விசாரணைகளுக்காக அழைத்து, நீண்ட நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளருக்கும், விசாரணைக்கான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
