உயர்வடைந்த தேங்காயின் விலை

கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் தற்போது தேங்காய்க்கான தட்டுப்பாடு நிலவுவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர் மழை காரணமாக தேங்காய் மட்டையை அகற்றுதல் மற்றும் போக்குவரத்து பாதிப்பு போன்ற காரணங்களால் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதனால் தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலையும் சடுதியாக அதிகரித்துள்ளது.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் இன்றைய நிலவரப்படி தேங்காய் ஒன்றின் விலை 100 ரூபாவிற்கு காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை