மன்னார் பிரதான பாலத்திற்கு அருகாமையில் உள்ள கோந்தை பிட்டி கடல் பகுதியில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை இனம் காணப்பட்டுள்ளது.
இன்றைய தினம் மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைக்காக கடற்கரை பகுதிக்கு சென்ற நிலையிலேயே பெண் ஒருவரின் சடலம் நீரில் மிதப்பதை அவதானித்து, மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டதோடு, மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த புதன்கிழமை மாலை மன்னார் பாலப்பகுதியில் இருந்து பெண் ஒருவர் கடலில் குதித்த நிலையில் அவரை தேடும் பணி இடம்பெற்ற போதும், குறித்த பெண் கிடைக்காத நிலையில் இன்றைய தினம் கரை ஒதுங்கிய சடலம் அப் பெண்னுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.



