கொழும்பில் உள்ள உணவகம் ஒன்றில் இன்று (20)காலை வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கொழும்பு 07 பழைய ரேஸ்கோர்ஸ் கட்டிடத்தில் அமைந்துள்ள உணவகத்தில் இவ் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வெடிப்பு சம்பவமானது உணவகத்தின் சர்வதேச துரித உணவு சங்கிலி பிரிவில் இடம்பெற்றதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரான எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவ தெரிவி த்துள்ளார்.
இதனை அடுத்து கொழும்பு தெற்கு பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் தலைமையில் கறுவாத்தோட்ட காவல்துறையினர் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் எரிவாயு கசிவால் வெடிவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
வெடிவிபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய அரசாங்க பகுப்பாய்வாளர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினரும் காவல்துறையினரும் இணைந்து தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.


