நாட்டில் நீர் விநியோகக் கட்டணங்களை அதிகரிப்பதற்கான எந்தவொரு தேவையும் இதுவரை ஏற்படவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் திலிண விஜேதுங்க இதனை கூறியுள்ளார்.
அத்துடன், உற்பத்திச் செலவை விட குறைந்த விலையில் நாட்டு மக்களுக்கு தண்ணீரை வழங்குவதன் ஊடாக ஆரோக்கியமான மக்களை உருவாக்குவதற்கே அரசாங்கம் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நீர் விநியோகத்தை மேற்கொள்வதற்கு பல்வேறு சேவைகளுடன் இணைந்து செயற்பட வேண்டியுள்ளதாகவும், அதனை அடிப்படையாகக் கொண்டே தமது சேவைகளை முன்னெடுத்து வருவதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் திலிண விஜேதுங்க கூறியுள்ளார்.
