நாடு மீண்டும் முடக்கப்படும் – சுகாதாரதுறையினர் விடுத்த எச்சரிக்கை

கொரோனா தொற்று பரவல் அதிகரிக்குமாயின் நாடளாவிய ரீதியில்  மீண்டும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கபடுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை மீறி செயற்படும் பட்சத்தில் விருப்பம் இன்றியேனும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தொற்று பரவல் ஏற்படும் வகையில் நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், கூட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு, தொடர்ந்தும் பொறுப்பற்ற விதத்தில் செயற்பாகள் முன்னெடுக்க்படும் பட்சத்தில் மீண்டும் விசேட கட்டுப்பாடுகள் விதிக்கபடுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் மீண்டுமொரு கோவிட் அலை ஏற்படும் அபாயம் காணப்படுவதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் விசேட வைத்திய நிபுணர் ருவன் ஜயசுரிய எச்சரிக்கை விடுக்கின்றார்.
புதியது பழையவை