சிறைச்சாலை வண்டியிருந்து தப்பியோடிய கைதிகள் மீண்டும் பொலிஸ் வலையில்

சிறைச்சாலை வண்டியிருந்து தப்பியோடிய இரண்டு சிறைக் கைதிகள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து  கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கு, இன்று பேருந்தொன்றில் அழைத்து சென்ற சந்தர்ப்பத்தில் குறித்த கைதிகள் தப்பியோடியுள்ளனர்.

மூன்று சிறைச்சாலைப் பேருந்துகள் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த நிலையில், அவற்றில் ஒரு வண்டியில் கைதிகளுக்கு இடையே குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில், மோதலைக் கட்டுப்படுத்துவதற்காக பேருந்தினை திறந்த நிலையில், நான்கு சிறைக் கைதிகள் தப்பியோடியுள்ளனர்.

இந்த நிலையில், அவர்களில் இரண்டு கைதிகள் பொல்கஹவெல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, ஏனைய இரண்டு கைதிகளையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
புதியது பழையவை