காத்தான்குடியில்- இளைஞர் கைது

ஈஸ்டர் தொடர் தாக்குதல்களுக்கு உடந்தையாக செயல்பட்டவர் என கூறி காத்தான்குடியைச் சேர்ந்த நபர் ஒருவரை கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சஹரானுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பை தளமாக கொண்டுயியங்கும் செய்தி சேவை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் இருந்து பெறப்பட்டது தகவல் ஒன்றின் பிரகாரம் குறித்த நபர் நேற்று (16) கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடியை பிறப்பிடமாகக் கொண்ட மொகமட் ஜாபார் (34) என்ற சந்தேக நபரையே பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கொழும்பில் வைத்து கைது செய்துள்ளதாக காத்தான்குடியில் உள்ள அவரது உறவினர்களுக்கு காத்தான்குடி பொலிஸார் அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே தாக்குதல் தொடர்பாக கைதாதியுள்ள சந்தேக நபர்களிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
புதியது பழையவை