அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் இன்று (ஞாயிற்றக்கிழமை) காலை கடுமையான பனிமூட்டங்கள் காணப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கல்முனை, நாவிதன்வெளி, சம்மாந்துறை, காரைதீவு, நிந்தவூர், சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை, ஒலுவில் போன்ற பிரதேசங்களில் இவ்வாறு பனிமூட்டமான காலநிலை நிலவுவதாக அவர் குறிப்பிட்டார்.
இதனால் வாகன சாரதிகள் உட்பட பொதுமக்கள் சிரமங்களுடன் பயணிப்பதை அவதானிக்க முடிந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

