புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

கேகாலை – மாவனெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகொல்ல பிரதேசத்தில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை நேற்று பொலிசாருக்கு கிடைக்க்பபெற்ற இரகசிய தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட மூவர் புதையல் அகழ்வுக்கு பயன்படுத்தும் உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

31,47,48 வயதுடைய கேகாலை ஹிங்குல ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாவனெல்ல பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
புதியது பழையவை