கிளிநொச்சி, சிவபாத கலையக பாடசாலைக்கு முன்பாக பாலம் அமைப்பதற்கு வெட்டிய குழி மாணவர்களுக்கு ஆபத்தாக மாறியுள்ளதாக பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் கரைச்சி பிரதேச சபையினரால் பாலம் ஒன்று அமைப்பதற்கு பாடசாலைக்கு அருகில் உள்ள வீதியில் சுமார் நான்கு அல்லது ஐந்து அடி ஆழத்தில் குழி வெட்டப்பட்டுள்ள நிலையில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக குறித்த குழி நிரம்பி நீர் செல்வதனால் ஆழமற்ற குழி என கருதிய மாணவர்கள் அதனை கடந்து செல்ல முற்பட்ட போது தவறி வீழ்ந்துள்ளதாகவும், அதிர்ஷ்டவசமாக ஏனைய உயர் வகுப்பு மாணவர்களால் அவர்கள் காப்பற்றப்பட்டதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆபத்தான பகுதி என எந்தவிதமான எச்சரிக்கை சமிஞ்கையும் இல்லாத நிலையில் குறித்த பகுதி காணப்படுகிறது.
இது தொடர்பில் கிராம அலுவலர் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கும் அறிவித்துள்ளதாகவும் பாடசாலை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.


