யாழில்-நீரிழிவு விழிப்புணர்வு சைக்கிள் ஓட்டம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில், நீரிழிவு விழிப்புணர்வு சைக்கிள் ஓட்ட நிகழ்வு இன்று இடம்பெற்றது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இவ் விழிப்புணர்வு சைக்கிள் ஓட்ட நிகழ்வானது மந்திகை, நெல்லியடி நகரம், வதிரி சந்தி, மாலைசந்தை ஊடாக மீண்டும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையை அடைந்தது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் வே.கமலநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன், சைக்கிள் ஓட்ட நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சமூகத்தினர் மற்றும் ஊழியர்கள் என பலரும் விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டனர்.

புதியது பழையவை