இலங்கையில் -பைசர் தடுப்பூசியின் பாவனை குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையில் பைசர் தடுப்பூசி செலுத்துவதன் ஊடாக, தேவையற்ற பாதிப்புக்களை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரும், வைரஸ் தொடர்பான விசேட நிபுணருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

பைசர் தடுப்பூசியின் செயற்பாடு தொடர்பில் விஞ்ஞான ரீதியில் சந்தேகம் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பைசர் தடுப்பூசியானது, கொரோனா பரவலுக்கு பின்னரான காலத்திலேயே முதல் தடவையாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாகவே தனக்கு இந்த தடுப்பூசி குறித்து சந்தேகம் நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு பைசர் தடுப்பூசியினை இறக்குமதி செய்வதனை இயலுமானளவு குறைத்துக்கொள்ளுமாறும், மாற்று தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதியது பழையவை