மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் உள்ள வறிய குடும்பமொன்றிக்கு புதிய வீடு வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின் எல்லைக் கிராமமான கட்டுமுறிவு ஆண்டான் குளத்தில் கணவனால் கைவிடப்பட்ட நிலமையில் 2 பிள்ளைகளுடன் தனிமையில் வாழ்ந்து வந்த வறிய குடும்பமொன்றிக்கு புதிய வீடு இன்று புதன் கிழமை (24) வழங்கிவைக்கப்பட்டது.

வாகரை ஆண்டான் குளத்தைச் சேர்ந்த திருமதி ரவிந்திரன் தரணி என்ற பயனாளிக்கே இவ் வீடு கையளிக்கப்ட்டுள்ளது.

நீண்டகாலமாக வீடொன்று இல்லாமல் வசதிகளற்ற தற்காலிக கொட்டில் ஒன்றில் சிறு பிள்ளைகளுடன் பல சிரமத்தின் மத்தியில் வாழ்ந்து வந்தவர்களின் அவல நிலமை தொடர்பாக கணடா நாட்டில் வசிக்கும் அ.ரெட்னகுமார் என்ற உதவும் உள்ளம் கொண்ட நபரிடம் பிரதேச நலன் விரும்பிகள் விடுத்த வேண்டுகோளினை அடுத்து இவ் மனித நேய உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 மாத காலத்திற்கு முன்பு இவ் வீடு கட்டுவதற்கான பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று பால் காச்சி புது மனை புகு விழா நிகழ்வு நடைபெற்றது.

எனவே இவ் உதவியினை வழங்கி வைத்த மேற்படி நபருக்கு தமது நண்றியை குறித்த குடும்பம் தெரிவித்தனர்.

புதியது பழையவை