Dubai EXPO 2020 இன் ஜேர்மன் பெவிலியனில் 2021 நவம்பர் 19 அன்று, சகிப்புத்தன்மை மற்றும் உள்ளீர்ப்பு என்னும் கருப்பொருளில் நடைபெற்ற சர்வதேச விருது வழங்கும் விழாவில், உலகளாவிய ரீதியில் அடிமட்ட சமூகங்களோடு (Grass root communities) வேலை செய்யும் பத்து செயற்றிட்டங்கள், பெரும் மதிப்புடைய Intercultural Innovation விருதுக்கான இறுதி வெற்றியாளர்களாக பெயரிடப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு, 120 நாடுகளில் இருந்து 1,100 இற்கு மேற்பட்டவிண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், தேர்வு செயல்முறை மிகவும் போட்டித்தன்மையுடன் இருந்ததுடன் விருது பெற்ற பத்து அமைப்புக்கள் 200,000 டொலர் நிதி மானியத்தை பகிர்ந்து கொண்டனர்.
நிதியுதவிக்கு கூடுதலாக, UNAOC மற்றும் BMW குழுமத்தின் திறன்-கட்டுமானம் மற்றும் வழிகாட்டுதலின் மூலம் Intercultural Innovation Award யினைப் பெறுபவர்கள் Accenture ஆதரவுடன் தங்கள் திட்டங்களை விரிவுபடுத்தவும், பிற சூழல்களுக்குப் பிரதிபலிக்கவும் உதவுவார்கள். சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் இளம் தலைவர்களுக்கான திறன் மற்றும் அறிவுப் பகிர்வு தளமான "Intercultural Leaders" வலையமைப்பில் சேரவும் அவர்கள் அழைக்கப்படுவார்கள்.
குறித்த விருதுகளில் இரண்டினை ஆசியா கண்டத்தில் இருந்து இலங்கை மற்றும் இந்தியா பெற்றுகொண்டன. இலங்கையிலிருந்து இளையோர் தலைமைத்துவத்தினை வலுப்படுத்தும் ஒன்றியம் (SYLC) மற்றும் DreamSpace Academy யினர் பெரு மதிப்பு உடைய, Intercultural Innovation Award யினை சர்வதேச அரங்கில் தன்னகத்தே பெற்று எமது மண்ணிற்கு பெருமை ஈட்டித்தந்துள்ளனர்!
SYLC, DreamSpace Academy யின் இணை-நிறுவுனர் கிஷோத் நவரெட்ணராஜா இவ் விருதினை அமைப்பின் சார்பாக பெற்றுக்கொண்டார். அவரிடம் இது பற்றி வினவிய போது “இலங்கையில் அடிமட்ட சமூகங்களுக்கு இடையே காணப்படும் முரண்பாட்டு பிரச்சனைகளை தீர்ப்பதற்கான இந்த பொறிமுறை, தொழினுட்பத்தின் உதவியுடன் அடிமட்ட சமூகங்களுக்கும் உரிய தரப்பினருக்கும் இடையிலான இடைவெளியினை நிவர்த்தி செய்து அப்பிரச்சனை தீர்வை நோக்கி நகரும் வரையில் பொறிமுறை தொழிற்படுவதன் மூலம் வன்முறையான முரண்பாட்டினை தவிர்ப்பதாக அமைகின்றது “ என தெரிவித்தார்.
United Nations Alliance of Civilizations (UNAOC) மற்றும் BMW Group இணைந்து Accenture இன் ஆதரவுடன், வழங்கப்படும் Intercultural Innovation Award ஆனது கலாச்சாரங்களுக்கு இடையிலான தொடர்பாடல் மற்றும் புரிதலை ஊக்குவிப்பதோடு சமாதானம் , கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு பங்களிக்கும் அடிமட்ட சமூகங்களோடு வேலை செய்யும் முயற்சிகளை ஆதரிக்கிறது.
விருதுகள் வழங்கும் விழாவில் UNAOC இன் உயர் பிரதிநிதியும் ஸ்பெயினின் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான எச்.இ. திரு. மிகேல் ஏஞ்சல் மொரடினோஸ் மற்றும் BMW குழுமத்தில் மனித வளங்களுக்குப் பொறுப்பான BMW AG இன் நிர்வாகக் குழு உறுப்பினர் திருமதி இகா ஹோர்ஸ்ட்மேயர், இந்த விழாவின் சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநில அமைச்சர், எக்ஸ்போ 2020 துபாய் பீரோவின் நிர்வாக இயக்குநர் மற்றும் துபாய் எக்ஸ்போ 2020 இன் உயர் குழுவின் உறுப்பினரான மேதகு ரீம் இப்ராஹிம் அல் ஹாஷிமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
"Intercultural Innovation Award (IIA) தனது 10-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிலையில், United Nations Alliance of Civilizations (UNAOC) மற்றும் BMW குழுமம் ஆகியவை பன்முகத்தன்மை மற்றும் சமத்துவம் கொண்ட சமூகங்களை வளர்க்கும் அடிமட்ட சமூகங்களோடு வேலை செய்யும் முயற்சிகளை வலுப்படுத்துவதன் மூலம் சரவதேச சமூகத்தை மேம்படுத்த தொடர்ந்து ஒத்துழைத்து வருகின்றன. ” என்று திரு. மொரடினோஸ் தனது தொடக்க உரையின் போது கூறினார்.
“Intercultural Innovation Award மற்றும் BMW குழுமத்துடனான எங்கள் இணைதலின் மூலம், புதுமையான வழிகளில் இந்த பிரச்சனைகளை தீர்க்கும் திட்டங்களை நாங்கள் வலுப்படுதுகின்றோம். UNAOC மற்றும் தனியார் துறைக்கு இடையே எப்போதும் வளர்ந்து வரும் இந்த ஒன்றிணைந்த வேலைத்திட்டங்களை முன்னிட்டு நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம், இது உலகெங்கிலும் உள்ள சமூக கண்டுபிடிப்பாளர்களின் வேலையைப் பெருக்கி வலுப்படுத்துகிறது. அவர்களின் அர்ப்பணிப்பும் தொலைநோக்கு சிந்தனையும்தான் UNAOC-BMW குழுமத்திற்கு இத்தகைய மதிப்பையும் தாக்கத்தையும் கொடுத்துள்ளது.
Intercultural Innovation Award ஆனது பன்முகத்தன்மை, சகிப்புத்தன்மை மற்றும் குறிப்பாக ஆக்கப்பூர்வமான வழியில் சேர்ப்பதை ஊக்குவிக்கும் நபர்களையும் திட்டங்களையும் கெளரவிக்கிறது. ஒரு சமூகமாகவும், ஒரு நிறுவனமாகவும் நம்மை முன்னோக்கி நகர்த்தும் மதிப்புகள் இவை. முன்னேற்றத்திற்கு ஒருங்கிணைப்பு தேவை என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் - BMW குழுமம் இதைத்தான் குறிக்கிறது. UNAOC உடன் இணைந்து, மதிப்பு வாய்ந்த உரையாடலுக்கு அர்த்தமுள்ள பங்களிப்பைச் செய்கிறோம்,” என்று BMW குழுமத்தில் மனித வளங்களுக்குப் பொறுப்பான BMW AG இன் நிர்வாகக் குழு உறுப்பினர் திருமதி இகா ஹோர்ஸ்ட்மேயர் கூறினார்.