கிளிநொச்சி – கிருஸ்ணபுரம் பகுதியில் உள்ளூர் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று(19)வெள்ளிக்கிழமை நண்பகல் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த இடியன் துப்பாக்கி மீட்கப்பட்டள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிருஸ்ணபுரம் பகுதியிலுள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகிலுள்ள பாலத்தின் உட்பகுதியிலிருந்தே குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

