திருகோணமலை- கிண்ணியாவில் நேற்று(23) நிகழ்ந்த படகு விபத்துச் சம்பவத்தை முன்னிட்டு வாழைச்சேனையில் வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன.
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பகுதியில் இழுவைப் படகு கவிழ்ந்ததில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவமானது நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

