இலங்கையில் ஆழிப்பேரலை ஏற்பட்டு நாளையுடன் 17 வருடங்கள் நிறைவடையவுள்ளன.
இதற்கமைய, ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக நாளை காலை 9.25 முதல் 2 நிமிடங்கள் வரை மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கோரியுள்ளது.
இதேவேளை, நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சமய நிகழ்வுகளை நடத்தவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் திட்டமிட்டுள்ளது.