முல்லைத்தீவில்-தாதியிடம் தகாத முறையில் செயற்பட்டவர் கைது


முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் மருத்துவமனையில் கோவிட்ட ஊசி போட்ட தாதி ஒருவரிடம் தகாத முறையில் நடந்துக்கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாங்குளம் ஆதார மருத்துவமனையில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

இந்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து குறித்த நபர் கைது செய்யப்பட்டு நேற்று (24) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 05.01.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சுகாதார பிரிவினரால் பாதுகாப்பான மற்றும் இலகுவான முறையில் மக்களுக்கான தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை