எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு முதல் இந்திய அரசாங்கத்ததின் நிதியுதவியில் 10 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தில் இன்று உரையாற்றுகையில் பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த அரசாங்கத்தில் வீடமைப்பு அமைச்சராக செயற்பட்ட தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கடமைகளை நேர்மையான முறையில் முன்னெடுத்திருந்தால் வடக்கு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட மக்கள் வீடின்றி நிர்க்கதிக்குள்ளாகியிருக்க மாட்டார்கள் என ராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.
இதேவேளை இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளை தற்போதைய அரசாங்கம் குறுகியகாலத்தில் பூர்த்தி செய்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதன்போது குறிப்பிட்டார்.
