2022 ஆம் ஆண்டை வரவேற்பதற்காக தயாராகும் மட்டக்களப்பு மாவட்டம்

புதிய வருடம் 2022 ஆம் ஆண்டை வரவேற்பதற்காக மட்டக்களப்பு நகரின் பல இடங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

மீன் பாடும் தேன் நாடு என்றழைக்கப்படும் மட்டக்களப்பு நகரின் இதயமெனக் கருதப்படும் காந்திப் பூங்கா மற்றும் அருகிலுள்ள நகர மணிக்கூட்டுக் கோபுரம், கோட்டைமுனைப் பாலம், கல்லடி பாலம் என்பன மட்டக்களப்பு மாநகரசபையினால் அலங்கரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


புதியது பழையவை