போதைப்பொருளுடன் பெண் கைது

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கபட்டிருந்த கணவருக்கு வழங்கவதற்காக, காற்சட்டைப்பையினுள் போதைப்பொருளை மறைத்து கடத்த முற்பட்ட கர்ப்பிணி பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் அவிசாவளை பகுதியை சேர்ந்நத 36 வயதடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த கணவரை பார்வையிட வந்தபோதே குறித்த பெண் போதைப்பொருளை எடுத்து வந்துள்ளார்.

அவருடைய நடத்தையில் சந்தேகித்த சிறைச்சாலை அதிகாரிகள் அவருடைய காற்சட்டையை சோதனைக்கு உட்படுத்திய போது 990 மில்லிகிராம் ஹெரோயின் பேததைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரான பெண் தன்னுடைய 6 மற்றும் 4 வயது பிள்ளைகளுடன் சிறைச்சாலைக்கு சென்றுள்ள நிலையில், அவர்கள் இருவரும் களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை