5ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் ஆரம்ப உரை நிகழ்த்தவுள்ள இலங்கை ஜனாதிபதி

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 5ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் ஆரம்ப உரையாற்றவுள்ளதாகக் கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி குறித்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று(03) இரவு 10 மணியளவில் அபுதாபி சென்றடைந்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை ஜனாதிபதி பல தரப்பு பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவுள்ளதுடன், இன்று மாலை இடம்பெறவுள்ள மாநாட்டில் 'சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் தொற்றுநோய்கள்' என்ற தலைப்பில் ஆரம்ப உரையையும் ஜனாதிபதி நிகழ்த்தவுள்ளார்.
புதியது பழையவை