திருகோணமலை, ஈச்சிலம்பற்று பூநகர் பகுதியில் கந்தளாய் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய அதிநவீன ஸ்கேனர் ஒன்றையும் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 40 – 45 வயதுக்கு இடைப்பட்ட பன்னிபிட்டிய, மாலபே ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக ஈச்சிலம்பற்று காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.