ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர்-சவூதி நிதியத்தின் பிரதிநிதி சுல்தான் அல் மர்சாத்தை சந்தித்தார்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றவூப் ஹக்கீம் அவர்கள் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் அல் மர்ஸாத் மற்றும் இலங்கைக்கு பொறுப்பாக இருக்கின்ற பொறியியலாளர் அல் மஸூத் அவர்களையும் இன்று(29) புதன்கிழமை சந்தித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.

இதன் போது நாட்டின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடியதாகவும்,நாட்டின் அபிவிருத்திக்கு சவூதி அபிவிருத்தி நிதியம் மூலம் உதவ உள்ளதாகவும் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்ததாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.

இதன் போது அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம்,மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கும் கலந்து கொண்டார்.
புதியது பழையவை