முச்சக்கரவண்டியில் வந்த தம்பதி அதிலிருந்து இறங்கியதன் பின்னர் குறித்த முச்சக்கரவண்டி திடீரென தீப்பிடித்து எரிந்துள்ள சம்பவமொன்று இன்று(29) அனுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் தீ விபத்து ஏற்பட்டபோது, மக்கள் பயந்து ஓடிய விதம் அருகில் உள்ள சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து அநுராதபுரம் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.