மட்டக்களப்பு - கறடியனாறு பொலிஸ் பிரிவில் பாரிய மண் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளதுடன், ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி பண்டார தெரிவித்துள்ளார்.
கரடியனாறு கொஸ்கொல்ல பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி நேற்று மூன்று டிப்பர் மற்றும் இரு உழவு இயந்திரங்களில் மண் கடத்தலில் ஈடுபட்ட ஐவரைக் குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்துள்ளனர்.




