வத்தளை – ஹுணுபிட்டிய சாந்தி மாவத்தையில் உள்ள வீடொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
எரிவாயு சிலிண்டர் வெடிப்பு காரணமாக குறித்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது.
குறித்த வீடு முழுமையாக சேதமடைந்துள்ள நிலையில், தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் 2 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மேலும், குறித்த தீப்பரவல் காரணமாக உயிராபத்து ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த தீ விபத்துக்கான காரணம் சிலிண்டரா அல்லது உபகரணங்களா என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.