கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் “கிழக்கின் அவிழ்தம்” சஞ்சிகை சிறப்பு மலர் வெளியீட்டு விழா கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி இ.ஸ்ரீதர் தலைமையில் கிழக்கு மாகாண முதலமைச்சின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இவ் விழாவுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் பிரதம அதிதியாகவும், சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.பாயிஸ், கிழக்கு பல்கலைக் கழக சித்த மருத்துவப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர்களான வைத்தியர் வி.அனவரதன், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய இணைப்பாளரும் புதுக்குடியிருப்பு தள ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான திருமதி பாஸ்கரன் ஜெயலட்சுமி, கல்முனை பிராந்திய இணைப்பாளரும் நிந்தவூர் மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான வைத்தியர் எம்.ஏ.நபீல், திருகோணமலை பிராந்திய இணைப்பாளரும், மேற்பார்வை சமூகநல மருத்துவ வைத்தியருமான சி.சிவச்செல்வன், திருகோணமலை – கப்பல்துறை தள ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அன்ரன் அனெஸ்றீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சஞ்சிகை வெளியீட்டு உரையை கல்முனை பிராந்திய இணைப்பாளரும் நிந்தவூர் மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான வைத்தியர் எம்.ஏ.நபிலினாலும், சஞ்சிகை நயவுரையை கிழக்கு பல்கலைக்கழக சித்த மருத்துவப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்தியர் வி.அனவரதன் ஆகியோரினால் நிகழ்த்தப்பட்டது.