லைட்டர் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகின - சிகரட் பற்றவைக்க முயற்சித்து மீசை கருகியது

கேஸ் அடுப்புகள் வெடித்துவரும் நிலையில் லைட்டர் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகின சிகரட் பற்றவைக்க முயற்சித்து மீசை கருகியது.
சாவகச்சேரி நகர் பகுதியில் சிகரெட் லைட்டர் வெடிப்பு சம்பவங்கள் இரண்டு பதிவாகியுள்ளன.

ஏற்கனவே சமையல் சிலிண்டர் கசிவும் , அடுப்புகள் வெடித்துவரும் நிலையில் சாவகச்சேரி சந்தை வியாபாரி ஒருவர் நேற்று முன்தினம் புதன்கிழமை லைட்டர் மூலம் சிகரெட் பற்ற வைக்க முனைந்த போது , லைட்டர் வெடித்துள்ளது. அதனால் , அவரது மீசை தீயில் கருகியது. இருந்த போதிலும் பெரியளவிலான அனர்த்தம் ஏற்படவில்லையென சொல்லப்பட்டது.

அதேவேளை நேற்று மாலை சாவகச்சேரி பேருந்து நிலையத்துக்கு அருகில் முதியவர் ஒருவர் லைட்டர் மூலம் சுருட்டை பற்ற வைக்க முனைந்த போதிலும் , லைட்டர் வெடித்துள்ளது.

இந்த சம்பவங்களையடுத்து லைட்டர்களில் நிரப்பப்படும் வாயுக்களின் தரம் குறித்தும் ஆராயப்படவுள்ளது.இந்த சம்பவங்களின் உண்மைத்தன்மை குறித்தும் விசாரிக்கப்படுகிறது.
புதியது பழையவை