மட்டக்களப்பு-சார்ள்ஸ் மண்டபத்திற்கு இளைஞர் யுவதிகளுக்கு அழைப்பு

மட்டக்களப்பு ஹெல்ப் எவர் அமைப்பின் ஏற்பாட்டில் இரத்ததானமுகாம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கையை பாதுகாக்க பசுமைப்புரட்சி வேலைத்திட்டமும் சமூக மட்டத்தில் உள்ள வறிய மக்களுக்காகவும் பல்வேறு சேவையினை ஹெல்ப் எவர் அமைப்பினர் முன்னெடுத்து வருகின்றனர்.

மூன்றாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் மாபெரும் இரத்ததானமுகாமை நடாத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் பாரிய இரத்தப்பற்றாக்குறையினை நிவர்த்திக்கும் வகையில் இந்த இரத்ததானமுகாம் நடாத்தப்படவுள்ளது.

உதிரம்கொடுத்து உயிர்காப்போம் என்னும் தொனிப்பொருளுக்கு அமைவாக ஞாயிற்றுக்கிழமை காலை 8.30மணி தொடக்கம் 2.00மணி வரையில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த இரத்ததான முகாமில் நலன்விரும்பிகள் அனைவரையும் கலந்துகொண்டு இரத்தம் வழங்கி ஒரு உயிரை காக்க உதவுமாறு ஹெல்ப் எவர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
புதியது பழையவை