பலநாள் கள்ளன் ஒருநாள் பிடிபடுவான் -காரைதீவில் சம்பவம்

பலநாள் கள்ளன் ஒருநாள் பிடிபடுவான் என்பதற்கிணங்க கடந்த காலங்களில் சுமார் பத்து துவிச்சக்கரவண்டிகளை களவாடி வந்த ஒரு திருடன் நேற்று பைசிக்கிள் ஒன்றை திருடும்போது கையும் மெய்யுமாக பிடிப்பட்டான்.

பைசிக்களை திருடும்போது ஆலய பாதுகாவலர் திடிரென பிடிக்க எத்தனித்தபோது ஓடமுயன்றுள்ளார். ஓடிச்சென்று அவனைப்பிடித்தார். அங்கு குழுமியிருந்த பொதுமக்கள் கள்ளனை மரத்தில் கட்டிவைத்து தர்மஅடி வழங்கினர்.

இச் சம்பவம் காரைதீவில் நேற்றுமுன்தினம் காலைவேளையில் இடம்பெற்றது.

காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு முன்பு உள்ள வாகனத் தரிப்பிடத்தில் தனியார் வகுப்பிற்கு செல்லும் மாணவர்கள் துவிச்சக்கரவண்டியை வைத்து விட்டு கல்முனை தனியார்வகுப்பிற்கு செல்வது வழமை.

இதனை அறிந்த திருடன் பலநாட்களாக துவிச்சக்கரவண்டியை திருடிவந்துள்ளான்.

 நேற்று முன்தினம் திருடும்போது அவர் வகையாக மாட்டியுள்ளார். தர்மஅடியின்பின்னர் காரைதீவுப் பொலிசாரிடம் திருடனை பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
புதியது பழையவை