மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராக இலங்கை நிர்வாக சேவை தரம் ஒன்று அதிகாரியான பொறியியலாளர் ந.சிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முதல் அமுலாகும் வரையில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத்தினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சில காலங்களாக மட்டக்களப்பு மாநகர சபையில் ஏற்பட்ட முரண்பாடுகளுக்கு மத்தியில், நேற்றைய தினம் புதிய ஆணையாளர் ஒருவரை கிழக்கு மாகாண ஆளுநர் நியமித்துள்ளார்.
நேற்று காலை அவர் தனது கடமைகளை மட்டக்களப்பு மாநகரசபையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

