வெடிபொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குள் நுழைய முற்பட்டவர் கைது

பொட்டாசியம் பெர்குளோரேட் என்ற வெடிபொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குள் நுழைய முற்பட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வாடகை வாகன சாரதியான குறித்த நபர், விமான நிலைய பொலிஸாரால் சிற்றூர்தியுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 25 கிலோ வெடிபொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சிற்றூர்தியின் உரிமையாளர், நீர்கொழும்பு கிம்புலாப்பிட்டி பகுதியைச் சேர்ந்த பட்டாசு உற்பத்தியில் ஈடுபடும் வர்த்தகர் ஒருவரென பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அத்துடன் குறித்த சிற்றூர்தியை, குறித்த பட்டாசு உற்பத்தி தொழிற்சாலைக்கு கொண்டுசெல்வதாகவும் சந்தேகநபர் குறிப்பிட்டுள்ளார்.
விமான நிலையத்தில் தமது வாடகை வாகனத்தின் பயணம் நிறைவடைய உள்ள நிலையில், தாம் சிற்றூர்தியை விமான நிலையம் நோக்கி விரைவாக செலுத்தியமையால், அதிலிருந்த வெடிபொருளை அகற்ற மறந்துவிட்டதாகவும், சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை